இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நாற்றாக இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால்.
ரஞ்சி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் சக வீரர்களுடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் எறியுள்ளார்.
விமான பயணத்தின் போது அவரின் இருக்கையில் வைத்திருந்த குடிநீரை எடுத்து சிறிதளவு அருந்தியதும் கடும் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார்.
எனினும், எரிச்சல் அதிகமாக இருந்ததால் உடனடியாக விமானத்தில் இருந்து மயங்க் அகர்வால் இறக்கபட்டார். அவருடன் கர்நாடகா மாநில அணியின் மேலாளரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பின்னர் மயங்க் அகர்வாலுக்கு ஆபத்தில்லை. இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மயங்க் அகர்வால் உடல்நிலை குறித்து கர்நாடகா மாநில அணியின் மேலாளர் ரகுராம் பட் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது மயங்க் அகர்வால் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட அவர், ‘நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.