இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியின் வீரர்கள் :
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ( கேப்டன் ), சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் படித்தார், ஸ்ரீகர் பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார், குலதீப் யாதவ்.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் :
பென் ஸ்டோக்ஸ் ( கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.