சச்சின் டெண்டுல்கர் காரில் சென்று கொண்டிருந்தப் போது அவருக்கு முன்பு, அவர் பெயர் போட்ட ஜெர்சி அணிந்திருந்த ரசிகரிடம் காரை நிறுத்தி பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த நிகழ்த்திய அவருக்கு செல்லும் இடமெல்லாம் ரசிகர் பட்டாளம் தான் சூழ்ந்திருக்கும்.
உலக கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகளை தனக்கு சொந்தமாக மாற்றிய சச்சின் டெண்டுல்கர், பிடித்ததை செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.
இவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்றளவும் அவருகேற்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே நமக்கு பிடித்த ஒரு கிரிக்கெட் வீரரின் பெயர் போட்ட ஜெர்சி-யை வாங்கி அணிந்து கொள்வோம். அப்படி இங்கு ஒருவர் ஜெர்சி-யை அணிந்து கொண்டு செல்லும் போது அந்த ஜெர்சியில் உள்ள பெயருக்கு சொந்தமான வீரர் அவரை அழைத்து பேசியுள்ளார்.
ஆம், சச்சின் டெண்டுல்கர், காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைகில் சென்று கொண்டிருந்தார்.
இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரிடம் காரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார்.
சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு.
உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என்று கூறினார். மேலும் அந்த ரசிகர் சச்சினின் புகைப்படங்களை தனது டைரியில் வைத்திருந்ததை எடுத்து காட்டினார்.
அதை பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பிறகு இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.
அதற்கு சச்சின், நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்திருந்தீர்கள். அதை பார்த்தது தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார். இதுகுறித்த வீடியோவை சச்சின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் “என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.” என பதிவிட்டிருந்தார்.