மனோ தங்கராஜின் மனோபாவம் சொந்த மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டம் வந்து விடக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு சென்ற அரசியல்வாதியை பார்த்து இருக்கிறீர்களா? என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,
மனோ தங்கராஜின் மனோபாவம் சொந்த மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டம் வந்து விடக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு சென்ற அரசியல்வாதியை பார்த்து இருக்கிறீர்களா? கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 32 சர்ச்சுகள், 30 கோயில்கள், 4 மசூதிகள் இடித்து சாலையை விரிவுபடுத்த ஐடியா தரும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்ட மக்களே! மனோ தங்கராஜின் மனோபாவத்தை புரிந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.