இளைஞா்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ‘எனது இளைய பாரதம்’ என்ற தளம் மூன்று மாதங்களில் 1.45 கோடி பதிவுகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இளைஞா்களின் மேம்பாட்டுக்காக ‘எனது இளைய பாரதம்’ என்ற தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது.
இது இளைஞா்கள் தலைமையில் ஏற்படும் வளா்ச்சிக்கான தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தவும், இளைஞா்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் ‘எனது இளைய பாரதம்’ என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜனவரி 31 ஆம் தேதி வரை எனது இளைய பாரதம் தளம் 1.45 கோடிக்கும் அதிகமான பதிவுகளை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2023, அக்டாபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை தினத்தன்று, டெல்லியின் உள்ள கடமைப் பாதையில் நாட்டின் இளைஞர்களுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ‘எனது இளைய பாரதம் (MY Bharat)’ தளத்தை தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மை பாரத் தளத்தில் (https://www.mybharat.gov.in/) பதிவு செய்து, தளத்தில் கிடைக்கும் பல்வேறு வாய்ப்பு வசதிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மாதம் 27ஆம் தேதி என்சிசி மற்றும் என்எஸ்எஸ் ஆர்வலர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மை பாரத்தின் வெற்றியைப் பற்றியும், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது இளைய பாரதம்-க்கு கிடைத்த அமோக வரவேற்பைப் பற்றியும் குறிப்பிட்டார்.
பாரதத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞர்களுக்கான மிகப்பெரிய தளம் இது என்று கூறிய அவர், இந்தத் தளம் விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களிடம் சென்றடைந்ததை எடுத்துரைத்தார்.
இந்தத் தளம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் இளைஞர்களிடையே தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் என்ற அதன் நோக்கத்தில் உறுதியாகவுள்ளது.
தற்போதுள்ள திட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தை அதிகம் பயன்படுத்தும் இந்தத் தளம் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘வளர்ச்சியடைந்த பாரதமாக’ மாற்றுவதற்கான கருவியாகவும் செயல்படுகிறது.