பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் விநியோகிக்கப்படும் அந்த்யோத்யா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத் திட்டத்தை மார்ச் 2026 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் சர்க்கரைக்கு மாதந்தோறும் கிலோவுக்கு ரூ.18.50 மத்திய அரசு
மானியம் வழங்குகிறது.
இதன்மூலம், நாடு முழுவதும் சுமார் 1.89 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்.
இதேபோல ஆடைகள், கையுறைகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றுக்கான மத்திய, மாநில வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு தள்ளுபடி வழங்கும் திட்டத்தை (ஆர்ஓஎஸ்சிடிஎல்) 2026- ஆம் ஆண்டு மார்ச் 31 வரை தொடரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று தெரிவிக்கப்பட்டது.