பாகிஸ்தானில் 93 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜனவரி மாதத்தில் குறைந்தது 93 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன, இதில் 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 135 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஜனவரி 2024 இல் 15 நபர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. PICSS, இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட இந்த குழு, நேற்று சில தரவுகளை வெளியிட்டது.
அதில், “பாகிஸ்தான் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் , 2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் தீவிரவாத நடவடிக்கைகளில் குழப்பமான எழுச்சியைக் கண்டுள்ளது, 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்துடன் ஒப்பிடும்போது 102 சதவீதம் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக” தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கைகளின்படி, தீவிரவாத தாக்குதல் அதிகரித்த போது, உயிரிழப்பு குறைந்துள்ளதாகவும், காயப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களின் இறந்தவர்களில், 41 பொதுமக்கள், 37 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 தீவிரவாதிகள் ஆகும். காயமடைந்தவர்களில் 81 பொதுமக்கள் மற்றும் 54 பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகும்.
PICSS வழங்கிய தரவுகளின்படி , ஜனவரி மாதத்தில் இதுபோன்ற 21 தாக்குதல்கள் நடந்துள்ளன, இதில் 10 பேர் இறந்துள்ளனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
அதேபோல் இந்த தாக்குதல்களில் இரண்டு வேட்பாளர்கள் உயிர் இழந்தனர், மேலும் பல வேட்பாளர்கள் தப்பி சென்றுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பல தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்தலாக அந்த அறிக்கை கூறுகிறது.