Google Bard AI கருவியை கொண்டு பயனர்களுக்கு AI புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
Google Bard AI கருவியை கொண்டு பயனர்களுக்கு இலவசமாகவும், துல்லியமாகவும் படங்களை உருவாக்க முடியும். பயனர்களின் கற்பனையில் இருக்கும் கதாப்பாத்திரங்களுக்கு அழகிய உருவத்தை கூகுள் பார்டு ஏஐ பயன்படுத்திக் கொடுக்க முடியும். அதனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
ஒரு பெண் பனிக்காலத்தில் ரோட்டில் நிற்கிறாள் என்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கு என்று Bard AI-யிடம் கூறியபோது, அது உருவாக்கிய புகைப்படம் இங்கே…
Bard AI-ன் நன்மைகள்:
கூகுள் பார்டு தொழில்நுட்பத்தை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம், பயன்படுத்த எளிதானது. பல்வேறு வகையான படங்களை உருவாக்க முடியும்.
Bard AI-ன் தீமைகள்:
தற்போது, எளிய படங்களை மட்டுமே உருவாக்க முடியும். சில நேரங்களில், Prompt-ஐ சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான படங்களை உருவாக்கலாம்.
Bard AI-யின் எதிர்காலம்:
Google Bard AI-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில், இது இன்னும் மேம்பட்ட படங்களை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற AI கருவிகள்:
வார்த்தைகளை புகைப்படமாக கொடுக்க கூகுள் பார்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் போல் ChatGPT Plus, DALL-E 2, Imagen 2 ஆகிய தொழில்நுட்பங்களும் இருக்கின்றன.