சிலி நாட்டில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் அதிகளவில் வனப்பகுதிகள் காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் அவ்வப்போது, காட்டுத் தீ ஏற்படும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின. இந்த தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. .இதில் அப்பகுதியில் இருந்த பல வீடுகள் எரிந்து நாசமாகின. வனப்பகுதியின் சுற்றி உள்ள பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
தீ விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த தீயைக் கட்டுப்படுத்தும் வகையில், விமானங்களின் மூலம் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.