பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகை பூனம் பண்டே. இவர், இந்தி திரையுலகில்தான் முதன் முதலில் அறிமுகம் ஆனார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ என்ற திரைப்படம் மூலம் திரையில் தோன்றினார்.
நடிகை கங்கான ரனாவத் நடத்திய லாக் அப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வழக்கம்.
இந்த நிலையில், பிரபல நடிகை பூனம் பண்டே இறந்து விட்டதாக அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இந்த தகவல் இந்தி திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில், நடிகை பூனம் பண்டே மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செய்யவே அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை பூனம் பண்டே மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம், மும்பை போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், புற்றுநோயைப் பயன்படுத்தி சுயவிளம்பரம் செய்துள்ளார் நடிகை பூனம் பண்டே. இந்த செய்திக்குப் பிறகு திரைத்துறையில் எதாவது மரணம் நடந்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். பூனம் பண்டே செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நடிகை பூனம் பண்டே மற்றும் அவரது மேலாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கொதிக்கின்றனர்.
இதே போன்று மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர் சத்யஜித் தாம்பே உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் பூனம் பாண்டேவுக்கு எதிராகக் குதித்துள்ளனர். இதனால், இந்தி திரையுலகத்தில் சூடு பறக்கிறது.