புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
குளத்தூர் செல்லமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறங்கப்பட்டன. அதேபோல் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முற்பட்டனர். சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சைக்கிள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.