19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி போட்டி அட்டவணை.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் லீக் சுற்று முடிவடைந்து, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.
16 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் சூப்பர் 6 சுற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சூப்பர் 6 சுற்றின் முடிவில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அந்த வகையில் அரையிறுதிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இந்த அரையிறுதி போட்டியானது பிப்ரவரி 6 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 6 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன.
வரும் 8 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் 11 ஆம் தேதி இறுதிப்போட்டியில் விளையாடும்.