2024 ஜனவரி வரை இந்திய ரயில்வே 1297.38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த சரக்குக் கையாள்வதில் கடந்த ஆண்டின் 1243.46 மெட்ரிக் டன் சரக்குகளைவிட 1297.38 மெட்ரிக் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட தோராயமாக 53.92 மெட்ரிக் டன் அதிகமாகும். கடந்த ஆண்டு கிடைத்த ரூ.1,35,388.1 கோடி வருவாயைவிட இந்த ஆண்டு ரயில்வேக்கு ரூ.1,40,623.4 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 2024 ஜனவரி மாதத்தில், சுமார் 8 மெட்ரிக் டன் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. இது சுமார் 6.43% முன்னேற்றம் ஆகும்.
2024 ஜனவரியில் 71.45 மெட்ரிக் டன் நிலக்கரியும், 17.01 மெட்ரிக் டன், இரும்புத் தாதுவும், 6.07 மெட்ரிக் டன் வார்ப்பிரும்பு மற்றும் முடிவுற்ற எஃகும், 7.89 மில்லியன் டன் சிமெண்டும் கையாளப்பட்டுள்ளது.
4.53 மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 5.27 மெட்ரிக் டன் உரங்கள், 4.31 மெட்ரிக் டன் தாது எண்ணெய், 6.98 மெட்ரிக் டன் கொள்கலன்களும் கையாளப்பட்டுள்ளது எனத் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.