சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் பாஜக கொடியேற்றி வைத்து தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைத்தார். தென் சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழுவதுமாக நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகத்தில் தான் பாஜக சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
2024 பாராளுமன்ற தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற தேர்தல் பணிமனையை திறந்து உள்ளோம்.
என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா வருகின்ற 25-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பல்லடத்தில் 530 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார். இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
பிப்ரவரி 11 தேதி என் மக்கள் என் மக்கள் யாத்திரை 200 வது தொகுதியாக சென்னையை தேர்தெடுத்துள்ளோம். அதில் கலந்து கொள்ள தேசிய தலைவர் ஜே. பி நட்டா சென்னைக்கு வருகிறார்
கோவை தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி வரவில்லை எனவே பிரதமர் செல்லாமல் இருக்கக்கூடிய புதிய பகுதியான பல்லடத்திற்கு பிரதமரை அழைத்துச் செல்ல வேண்டும் என பல்லடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அனைத்து கட்சிகளுக்கு பலம், பலவீனம் இருக்கும். கூட்டணி பேச்சு வார்த்தை என்பது எளிதான ஒன்றல்ல, கடினமான ஒன்று.
யாரெல்லாம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம். இந்த மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும்.
பாஜகவின் வாக்கு வங்கி என்பது எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில், எழுச்சி வாக்கு வங்கியாக மாறும்.
காசி விசுவநாதர் கோவில் சீரமைக்கப்பட்ட பிறகு 8.5 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர்,
திமுக அரசு ஆன்மீகத்திற்கும், கடவுளுக்கும் எதிரான அரசு. பாஜக அரசு கோவில்களை சீரமைப்பதும் கோவில்களை திறப்பதும் அரசியலுக்காகவோ, ஆட்சிக்காகவோ இல்லை.
ராமர் கோயிலினால் உத்தரபிரதேச அரசுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வருமானமாக வரப்போகிறது.
திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி அதானி தான் ராமர் கோவிலை திறந்து உள்ளார் என கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
2024 இல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட போவது இல்லை. ஆனால் 2026 இல் தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நடைபெறும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக நிறைய இடங்களில் முதல் இடத்திலும், சில இடங்களில் மட்டும் 2 வது இடத்தை பிடிக்கும்.
எதிர்க்கட்சியில் தமிழகத்தில் பிரதமர் வேட்பாளர்கள் எவரும் இல்லை, தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.
கற்றல் அறிவு குறைவாக உள்ளவர்கள் திமுக என்பதற்கு உதயநிதி தான் உதாரணம், சங்கராச்சாரியார்கள் மீது உதயநிதிக்கு திடீர் அக்கறை உண்டாகுமானல் ஏன் தமிழக கோவில் கும்பாபிஷேகத்திற்கு சங்கராச்சாரியர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை?உதயநிதிக்கு தீடீர் என இந்துக்களின் மீது பாசம் பிறந்துள்ளது எனத் தெரிவித்தார்.