மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பாரம்பரியமிக்க பழங்கால கார் மற்றும் இருசக்கர வாகன பேரணியை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கிழக்கு இந்திய ஆட்டோமொபைல் சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில், பல மாநிலங்களில் இருந்து பல்வேறு நிறுவனங்களின் பழங்கால கார்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றைக் காண வாகன ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கார் பேரணியை பார்த்து ரசித்தனர். அப்போது, அவர்கள் பழைய பாரம்பரிய கார்கள் முன்பு நின்று செல்பி எடுத்தும், கார் உரிமையாளர்களுடன் காரை பராமரிக்கும் ரகசியம் குறித்த விவரங்களை கேட்டு உரையாடியும் மகிழ்ந்தனர். மேலும், கார்களை தங்கள் கேமராக்களில் படம் பிடித்தனர்.
கிழக்கு இந்திய ஆட்டோமொபைல் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பழங்கால கார் பேரணி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.