நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தக்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்தார். தென் சென்னை, வட சென்னை தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன. தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மாநில தேர்தல் மேலாண்மை குழு, நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உள்ளிட்ட 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கால் சென்டர், வீடியோ வேனுக்கு தேர்தல் குழு:
* தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டோகாலுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* அலுவலக நிர்வாகம், வாகனம், வீடியோ வேனுக்கு தனித்தனி குழுக்களை பாஜக அமைத்தது.
பட்டியல், பழங்குடியினத்துக்கு தனி பிரச்சாரக்குழு:
* பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும் உரையை அச்சிட தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
* மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு அமைப்பு.
* தேர்தல் அறிக்கை தயாரிக்க எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகைக்கு தனி தேர்தல் குழு:
* குற்றப்பத்திரிகை தயாரிக்க பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.