அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சலில் நடந்து வரும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இசை, ராக், பாப் நடனம், என பல பிரிவுகளில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கிராமி விருது இந்திய இசைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் இசைத் துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. அதில் கிராமி விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இசைத்துறையின் மிக உயரிய கிராமி விருது இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரபல இசை கலைஞர் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.
அதில் திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்