நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் முதலில் டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் கேப்டனாக உள்ளார். சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார்.
The Trans-Tasman rivalry is set to resume!
The following 15 players will soon head to New Zealand for three T20Is against the @BLACKCAPS. pic.twitter.com/Mf8SEHBiVv
— Cricket Australia (@CricketAus) February 6, 2024
ஆஸ்திரேலியா டி20 அணி :
மிட்செல் மார்ஷ் (கேப்டன் ), கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் சுமித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.