தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது தேக்கன்குளம். இந்த பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பச்சைமால் (25).
இவரது தோட்டத்தில் உள்ள ஒரு சொகுசு வாகனத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைத்துள்ளார் என மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு எஸ்.ஐ. ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தேக்கன்குளம் பகுதியில் உள்ள பச்சைமாலின் தோட்டத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், பச்சைமாலின் காரில் மூட்டை மூட்டையாகப் புகையிலை மற்றும் குடகா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, பச்சைமாலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 55 கிலோ குட்கா, 3 செல் போன்கள், 1.53 லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், பச்சைமாலை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.