கடந்த 2023-ஆம் ஆண்டு, 294 பெண்களுக்கு வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தமாக 1,622 பேருக்கு வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்கு மட்டும் 294 உரிமங்கள் வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதமாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு 240 பெண்களுக்கு விமான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில், 2023-ஆம் ஆண்டு பெண் ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது
தற்போது, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில், சுமார் 14 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
நாட்டில் ஆண், பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.