இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது,
A statement from Buckingham Palace: https://t.co/zmYuaWBKw6
📷 Samir Hussein pic.twitter.com/xypBLHHQJb
— The Royal Family (@RoyalFamily) February 5, 2024
`புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் தொடர்பாக மன்னர் சார்லஸுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையின் போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இன்று புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சை தொடங்கி உள்ளது. இதனால், அவர் பொதுவெளியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில், அவர் வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொள்வார். விரைவில் முழுமையாக பொதுப்பணிக்குத் திரும்புவார். உலகில் உள்ள அனைவருக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில், தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பை அறிவித்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.