முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா இரண்டு முறை ஒரே பிரிவில் கிராமி விருது வென்றுள்ளார்.
அமெரிக்காவில் இசைத் துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த கிராமி விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் தமிழ் பாடகர் சங்கர்மகாதேவன், விநாயக்ராம் செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகீர் இந்த ஆண்டு கிராமி விருதை வென்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார்.
மிச்செல் ஒபாமா “தி லைட் வி கேரி: ஓவர்கம்மிங் இன் அன்சர்டைன் டைம்ஸ்” என்ற ஆடியோ புத்தகம் விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பிரிவில் இந்த விருதை வென்றார்.
இது இவரின் இரண்டாவது கிராமி விருதாகும். முன்னதாக 2020 ஆம் ஆண்டு இதே பிரிவில் இவர் தனது முதல் கிராமி விருதை வென்றுள்ளார்.