மின் கட்டண உயர்வை எதிர்த்து ஐயா நாராயணசாமி நாயுடு நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் உலக அளவில் புகழ்பெற்றது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவரும், விவசாயப் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவருமான ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் பிறந்த தினம் இன்று.
விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்களில் முக்கியமானவரும், விவசாயப் போராட்ட முறைகளைச் செழுமைப்படுத்தியவருமான ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் பிறந்த தினம் இன்று.
1950களில் விவசாயத்துக்காக வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டபோதும், 1970களில், மின்கட்டணம்… pic.twitter.com/qV6HFBzxmd
— K.Annamalai (@annamalai_k) February 6, 2024
1950களில் விவசாயத்துக்காக வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டபோதும், 1970களில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், விவசாயிகளைத் திரட்டிப் பெரும் போராட்டம் நடத்தி, விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். மின் கட்டண உயர்வை எதிர்த்து இவர் நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் உலக அளவில் புகழ்பெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவி, தனது வாழ்நாள் முழுவதும் விவசாய நலனுக்காகவும், விவசாயிகள் நல்வாழ்வுக்கும் வாழ்ந்த ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.