BIMSTEC நாடுகளுக்கு இடையேயான நீர் விளையாட்டு போட்டி : இன்று தொடக்கம்!
Jul 29, 2026, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

BIMSTEC நாடுகளுக்கு இடையேயான நீர் விளையாட்டு போட்டி : இன்று தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முதலாவது BIMSTEC நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

டெல்லியில் முதல் முறையாக BIMSTEC நீர் விளையாட்டுகள் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த ஆண்டு தொடங்குகிறது.

இந்த BIMSTEC நாடுகளில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், இலங்கை உட்பட தெற்காசியாவிலிருந்து ஐந்து மற்றும் மியான்மர் மற்றும் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இரண்டு நாடுகள் உள்ளன.

இதில் மூன்று விளையாட்டுப் போட்டிகளில் 39 பதக்கங்களும், மொத்தம் 9 கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் இதில் பல்வேறு BIMSTEC உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 268 விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இவர், ” உலகின் 25 சதவீத மக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.

7 BIMSTEC நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், வங்காள விரிகுடா பகுதியில் பயணம் மற்றும் போக்குவரத்துக்கு மேம்படுவதோடு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

இந்த நீர் விளையாட்டுப் போட்டி, விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான நட்பை ஆழப்படுத்த உதவுவதுடன், விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கவும் உதவும்.

இந்த நோக்கத்துடனேயே நேபாளத்தில் நடந்த உச்சிமாநாட்டின் போது, இந்த விளையாட்டுத் தொடர்பான அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார் ” என்று கூறினார்.

மேலும் அவர், BIMSTEC நாடுகளின் கூட்டமைப்பு வரலாற்றில் முதன்முறையாக ஒரு விளையாட்டு போட்டி நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த தொடக்க விழாவில் நேபாளத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் டிக் பகதூர் லிம்பு மற்றும் BIMSTEC நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவது BIMSTEC நீர் விளையாட்டு (அக்வாடிக்ஸ்) சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் நீச்சல், வாட்டர் போலோ மற்றும் டைவிங் பிரிவுகளில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags: BIMSTECAnurag Thakur Press Meet
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்!

Next Post

விவசாய நலனுக்காகவும், நல்வாழ்வுக்கும் வாழ்ந்தவர் ஐயா நாராயணசாமி நாயுடு! – அண்ணாமலை

Related News

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies