19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் லீக் சுற்று முடிவடைந்து, சூப்பர் 6 சுற்று முடிவடைந்து தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்களை எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 6 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என மொத்தமாக 76 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து களம் இறங்கிய ஆலிவர் வைட்ஹெட் 22 ரன், திவான் மரைஸ் 3 ரன், ஜுவான் ஜேம்ஸ் 24 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பாண்டே மற்றும் திவாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது.
பின்பு அடுத்தடுத்து 4 விக்கெட்கள் சரிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 32/4 என்ற நிலையில் இருந்தது. பின்னர் இந்திய அணியின் கேப்டன் உதய் மாற்று சச்சின் தாஸ் களமிறங்கினர்.
இவர்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக அமைய இருவரும் தங்களின் உயிரை கொடுத்து விளையாடி சரிவில் இருந்த இந்திய அணியை மேலே கொண்டு வந்தனர்.
இவர்களின் பார்ட்னெர்ஷிப் 150 ரன்களை கடந்தது. 32 ரன்களில் இருந்த இந்திய அணியை இவர்கள் 203 ரன்களை கொண்டு வந்தனர்.
42வது ஓவரில் இந்திய அணி 203 ரன்கள் எடுத்த சமயத்தில் சச்சின் தாஸ் 11 பௌண்டரீஸ் 1 சிக்சர் என 96 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் உதய் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் வெற்றி அடைவது கஷ்டம் என்ற எண்ணிய இந்திய அணி 48வது ஓவர் முடிய 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக குவேனா மபகா மற்றும் டிரிஸ்டன் லூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் உதய் சாகரன்னுக்கு வழங்கப்பட்டது.