அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற அருணாச்சல பிரதேச முதல்வர் இந்தக் கோயில் ஒரு பெருமைக்குரிய விஷயம் என கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செவ்வாய்கிழமையன்று அருணாச்சல முதல்வர் பெமா காண்டு சென்றுள்ளார்.
500 ஆண்டுகளுக்குப் பின் எழுப்பப்பட்டுள்ள இந்த கோயில் ஒரு பெருமைக்குரிய விஷயம் என அவர் அருணாச்சல முதல்வர் பெமா காண்டு கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 70 பேர் ராமர் கோயிலுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறோம்.
ராமர் கோயிலில் மரியாதை செலுத்த நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். இரண்டு வருடங்களுக்குமுன் கட்டிட வேலைகள் நடக்கும்போது இங்கு வந்திருக்கிறேன். பல சிக்கல்களைச் சந்தித்து 500 வருடங்களுக்குப்பின் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் ஒரு பெருமைக்குரிய விஷயம்” எனக் கூறியுள்ளார்.