அதிமுகவைச் சேர்ந்தவர் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி. இவருக்கு வயது 45. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்துக்கு, நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
கடந்த 4-ம் தேதி கசாங் நளா பகுதியில் கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே பலியானார். கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக அம்மாநில போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து வெற்றியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான இடத்தில், வாகனத்தின் சில பகுதிகள் மற்றும் மனித உடல் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் கிடைத்துள்ளன. அதனை, தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தனது மகன் வெற்றி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.