தை அமாவாசையையொட்டி, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நற்பலனைத் தரும். குறிப்பாக, தை அமாவாசை தினம் அன்று பசு, காகம், நாய் ஆகியவற்றுக்கு உணவளித்தால், கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுப்பதும், ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பதும் வழக்கம்.
இதனால், பலரும் தை அமாவாசையையொட்டி, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்குச் சென்று வழிபாடு நடத்துவர்.
ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக 8-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து,சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.