“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்” 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை 2024 இன்று குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.
“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்” 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்தத் தோட்டத்தில் இன்று காலை 11.15 மணிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும் கலந்து கொள்வார். இந்த நிகழ்வு, தோட்டத் திருவிழா 2024-ன் ஒரு பகுதியாகக் குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்திற்குள் உள்ள அமிர்தத் தோட்டத்தில் நடைபெறுகிறது.
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பெருவிழாவிற்கு மக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
பன்முகத்தன்மை அமிர்தப் பெருவிழாவின் முதல் பகுதி, பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து, வடகிழக்கு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்து, பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்கியாக இருப்பதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.