உயர்திறன் மிக்க தற்சார்பு விண்வெளிப் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க காலம் வந்துவிட்டது என்று முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் தெரிவித்துள்ளார்.
டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மானக்ஷா மையத்தில், மூன்று நாள் விண்வெளிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான ‘டெஃப்சாட்டை’ முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான் இன்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, விண்வெளி விரிவாக்கம் முதல் ஆய்வு வரை, நாட்டிற்கான பெரிய இலக்குகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனிதக்குலத்திற்கும், போரில் ஈடுபட்டுள்ள ஆயுதப் படைகளுக்கும் விண்வெளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நிலம், வான், கடல், இணையம் போன்ற களங்களில் போர்த் திறன்களை மேம்படுத்த விண்வெளியை ஒரு சக்தியாகப் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்த விண்வெளியை மூலதனமாக்குவதற்கான அரசு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விண்வெளிப் பாதுகாப்பு 2022-ன் ஒரு பகுதியாக விண்வெளி தொடர்பான 75 சவால்களைப் பற்றி குறிப்பிட்டார். “இந்த முயற்சியின் கீழ், மொத்தம் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும் நான்கு ஒப்பந்தங்கள் ஆவணப்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்று கூறினார்.