திமுக போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கிறது! - அண்ணாமலை
Jul 7, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 8, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திமுக ஆட்சியில், வெறும் 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

ஆர் என்றால் அத்தி மரங்கள். அத்தி மரங்கள் அதிகமாக இருந்த காடு என்பதால் ஆற்காடு என்ற பெயர் பெற்றது. 1100 ஆண்டுகள் பழமையான வரதராஜர் கோவில், வடராமேஸ்வரம் ராம நாதேஸ்வரர் கோவில் என ஆன்மீகம் பெருகும் மண். 110 ஆண்டுகளாக துல்லியமாகக் கணக்கிடும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் இந்தப் பகுதியின் சிறப்பு. தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை பற்றியும், இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றியும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது சிறப்புக்குரியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.

ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று அடுத்த நான்கு ஆண்டுகளில், 2028 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும்.

இன்றைய தினம், பாராளுமன்றத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  பேசுகையில், காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது என்று கூறினார்.

நமது பிரதமர் அவர்களின் கனவு மிகப் பெரியது. நமது நாட்டை வல்லரசாக்க, ஏழை மக்கள் அனைவரும் முன்னேற, இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக மாற, மத்திய அரசின் திட்டங்களும், பணிகளும் நேரடியாக மக்களைச் சென்று சேர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு, பாஜகவின் எண்ணம், சிந்தனை, கனவு, இலக்கு உழைப்பு, மக்கள் வைத்திருக்கும் அன்பு என அனைத்தும் பெரிது. அதனால்தான் முடியாது என்று இத்தனை ஆண்டுகளாக நினைத்திருந்தவற்றை எல்லாம் முடித்துக் காட்டியிருக்கிறோம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, 283 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்த நமது பிரதமர் அவர்கள், தமது நல்லாட்சியால், 2019 ஆம் ஆண்டு 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, நமது பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி.

பாஜகவில் மட்டும்தான் சாமானிய மக்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு வர முடிகிறது. தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு, மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் சாமானிய மக்கள், இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். நமது பிரதமரின் குரல், பாஜகவின் குரல் இன்று சாமானிய மக்களைப் பிரதிபலிக்கிறது.

பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதன்முதலாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நமது பிரதமர் அவர்கள் அமைச்சரவையில், மொத்தம் 76 அமைச்சர்களில், 12 பேர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

8 பேர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 25% க்கும் அதிகமான பிரதி நிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மையான சமூக நீதி. ஆனால் போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில், வெறும் 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்.

நமது பிரதமர் இன்று பேசுகையில், காங்கிரஸ் கட்சி இனி எதிர்க்கட்சி வரிசையில் கூட இருக்க முடியாது. பாராளுமன்றப் பார்வையாளர் இருக்கையில் மட்டுமே அமர வைக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர்.

குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இதுதான் நிலை என்று கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சி நமது நாட்டு மக்களை சோம்பேறிகளாகப் பார்க்கிறார்கள். முன்னாள் பிரதமர் நேரு அவர்கள், இந்திய மக்கள் சோம்பேறிகள், எனவே நாட்டின் வளர்ச்சி விரைவாக வராது என்று கூறினார்.

ஆனால் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முடிவையும் மக்களின் உழைப்பை நம்பியே எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று சொன்னபோது, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள், அது சாத்தியமில்லை என்று கூறினார். இன்று உலக நாடுகளின் அனைத்திலும் நடக்கும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் 54% இந்தியாவில் மட்டுமே நடக்கின்றன.

மற்ற உலக நாடுகள் அனைத்தும் சேர்த்துத்தான் 46% பணப்பரிவர்த்தனை நடக்கிறது.
காஷ்மீரில் ஆர்டிகிள் 370, அயோத்தி ராமர் கோவில் என எவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி முடியாது என்று சொன்னதோ அவை அனைத்தும் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தைரியமான முடிவுகளால் தீர்வு காணப்பட்டுள்ளன.

ஆற்காடு மக்களின் நெடு நாள் கோரிக்கையான நகரியிலிருந்து திண்டிவனத்துக்கு ரயில் போக்குவரத்துக்காக, பாஜகவினரின் வேண்டுகோளின்படி, இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக யார் வேட்பாளராக நின்றாலும், அவர் பெயர் நரேந்திர மோடி என எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள் முன்னேற, நம் குழந்தைகள் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் நமது பிரதமர் கரங்களுக்கு வலு சேர்ப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal annamalai
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Next Post

எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies