திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அனுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய நாட்டு தூதர் டெனிஸ் அலிபோவ் குழுவினர் கூடங்குளத்தில் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் இந்திய அணுசக்தி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான புவன் சந்திர பதக் உள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து ரஷ்ய நாட்டு தூதர் டெனிஸ் அலிபோவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-6 அலகு கட்டுமான தளங்களை இந்திய அணுசக்தி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் அலெக்ஸி லிக்காச்சேவ் மற்றும் நிர்வாக இயக்குனரான புவன் சந்திர பதக் ஆகியோருடன் பார்வையிட்டேன்.
Visited the construction sites of Units 3-6 of Kudankulam NPP together with Alexey Likhachev, Director General, @rosatom, & Shri Bhuwan Chandra Pathak, Chairman & MD, NPCIL, @DAEIndia. pic.twitter.com/S5Oed80nfL
— Denis Alipov 🇷🇺 (@AmbRus_India) February 7, 2024
இது முதன்மையான ரஷ்யா-இந்தியா தொழில்நுட்ப திட்டம். இந்தியா தற்போது வெளிநாட்டு ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அலகுகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. புதிதாக அமைக்கப்படும் 4 அலகுகளின் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.