பாகிஸ்தானில் இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 17000 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வந்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தம் 12 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.
இவர்கள் வாக்களிப்பதற்காக அந்நாடு முழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 17000 மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வந்துள்ளது.
அதாவது மொத்தமாக 17,816 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களில் 12,695 பேர் மாகாண சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 5,121 பேர் தேசிய சட்டமன்றத்திற்கும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
இவர்களில் 16,930 பேர் ஆண்கள், 882 பேர் பெண்கள் மற்றும் நான்கு திருநங்கைகள் உள்ளனர். மேலும் இதில் ஒரு கட்சியில் 6,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 5,726 ஆண்கள் மற்றும் 275 பெண்கள் உள்ளனர். மீதமுள்ள 11,785 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்,அவர்களில் 11,174 ஆண்கள், 607 பெண்கள் மற்றும் 4 திருநங்கைகள் உள்ளனர்.
அதேபோல் 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.