பஸ் ஸ்டாண்ட் மாற்றம் என்பது அவசரம் அவசரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
பல ஆண்டுகளுக்கு முன்பு, கழகங்கள் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளத்துவங்கிய கால கட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வை கூறுகிறேன்!
கழகங்களின் ஒன்றை சார்ந்த ஊராட்சி தலைவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியோடு வந்தார்! மகிழ்சிக்கு காரணம் ரூபாய் 1 லட்சத்திற்கு அவருக்கு ஒரு வேலை ஒப்பந்தம் கிடைத்துவிட்டது என்பதுதான்! மத்திய அரசு பணத்தை ஒதுக்கிவிட்டது!
கிராமங்களில் பொது கழிப்பிடம் கட்டுவதற்காக மத்திய அரசு பணம் ஒதுக்கியது! அந்த ஊராட்சி தலைவரின் கிராமத்தில் ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டவேண்டும்! கட்டுவதானால் ஒரு லட்சம் பணம் கிடைக்கும்! இந்த வேலையை எடுத்து செய்தால் 30, ஆயிரம் 40 ஆயிரத்தில் வேலையை செய்து முடித்துவிட்டு 50, ஆயிரம் 60 ஆயிரத்தை சம்பாதித்து விடலாம் என்பதுதான் அவரது மகிழ்ச்சிக்கு காரணம்!
திடீரென ஊராட்சி தலைவரின் மகிழ்சி கொள்ளை போய் விட்டது துக்கம் சூழ்ந்துக்கொண்டது! காரணம் பொதுகழிப்பிடம் கட்டிக்கொள்ள பொது இடம் வேண்டும் என்பதுதான்! அந்த கிராமத்தில் எல்லா இடங்களுமே அரசு புறம்போக்குதான்! எல்லோருமே ஆக்கிரமித்துதான் வீடு கட்டியுள்ளனர்! ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை பொது கழிப்பிடத்திற்காக விட்டுத்தர யாரும் தயாராக இல்லை!
பொதுக்குளத்தின் கரையில் ஏற்கெனவே 5 ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோல ஒரு பொது கழிப்பிடம் கட்டப்பட்டு யாரும் பயன்படுத்தாமல், பாழடைந்து கிடக்கிறது! அதை உடைத்து தள்ளிவிட்டு அந்த இடத்திலேயே புதிய கழிப்பிடத்தை கட்டிவிடுவது என பஞ்சாயத்து தலைவர் முடிவு மேற்கொண்டார்!
புதிய கழிப்பிடத்தை கட்டி முடித்து ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஒரு லட்சத்தை வாங்கி, 65000 த்தை சம்பாதித்து விட்டார் பஞ்சாயத்து தலைவர்! மக்கள் யாரும் புகார் செய்யவில்லை! காரனம் புகார் செய்தால் அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் காவல் துறையையும் பகைத்துக்கொள்ள நேரும்! எனவே கிடைத்த ஒரு வேளை பிரியாணியை சாப்பிட்டு விட்டு மகிழ்சியில் திழைத்தனர்!
யாரும் அந்த புதிக கழிப்பிடத்தை பயன்படுத்தவில்லை! மீண்டும் அதை உடைத்து அதில் இன்னொன்றை கட்டி சம்பாதிப்பார்கள்! கழகங்களின் உள்கட்டமைப்பு பணி என்பது இதுதான்!
சென்னை நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகத்தான் கிளாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையம், கட்டிட, அதிமுக ஆட்சி காலத்தில் பணி துவங்கியது! கட்டி முடிப்பதற்குள் ஆட்சி மாறிவிட்டது! கோயம்பேடு பேருந்து நிலையத்தை உடைத்து ஸ்டாலின் மகனுக்கு மால் கட்டிக்கொடுப்பதற்கான திட்டமல்ல அது!
மதுரவாயல் பெருங்களத்தூர் பைபாஸ் சாலை நெருக்கடி இல்லாமல்தான் இருக்கிறது! தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் வழியாக சென்றால் நெருக்கடியே இருக்காது! மதுரவாயல் பைபாசுக்கும் கோயம்பேட்டுக்கும் இடைப்பட்ட நெற்குன்றம் மதுரவாயல் பகுதிதான் சற்று நெருக்கடியானது! அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் கட்டத்துவங்கியதன் காரணம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ்களை கிளாம் பாக்கத்தில் இருந்தும் இயக்கத்துவங்கலாம் என்பதுதான்!
ஆனால், திமுகவோ பேருந்து நிலையத்தையே காலி செய்து குடும்பத்துக்கு ஒரு ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டவேண்டும் என திட்டமிடுகிறது!
அதுபோல கோயம்பேடு மார்க்கெட்டையும் காலி செய்து அங்கேயும் தனது பேரனுக்கு காம்ளக்ஸ் கட்டித்தர போகிறாராம் மு.க.ஸ்டாலின்! அது எப்படி? அரசு நிலத்தில் இவர்கள் சாப்பிங் காம்ளக்ஸ் கட்டிக்கொள்ள முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம்!
இவர்களின் நிறுவணம்தான் லூலூமார்ட் என்பது! லூலூமார்ட் நிருவணத்திடம் திமுக குடும்பம் ஊழல் பணத்தை கொடுத்து, அந்தப்பணத்தை அந்த நிருவணத்தின் சொந்த பணம்போன்ற பாவனையில் துபாயில் ஒப்பந்தம்போட்டு தமிழகத்தில் முதலீடு என்னும் போர்வையில், ஸ்டாலின் குடும்பம் கோ பேருந்து நிலையத்தையும் கோயம்பேடு மார்க்கெட்டையும் காலி செய்து, அதில் வியாபாரம் செய்யப்போகிறார்கள் என்பதுதான் உண்மை!
கோயம்பேடு பஸ் நிலையமும் கோயம்பேடு மார்க்கெட்டும் கோயம்பேட்டில் இருப்பதால், போக்குவரத்து வசதிக்காக, மெட்ரோ ரயில் டெர்மினல் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது! கோயம்பேட்டில் இருந்து பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலை வரை பல மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன! கோயம்பேடு பேருந்து நிலையத்தின் முன் பக்கம் ஒரு பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நெருக்கடி இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது! கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்ளாகவே ரயிலில் வந்து இறங்கும் வகை செய்யப்பட்டுள்ளது!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், அருகில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்தும் எளிதாக வெளியேறும் வகையிலும், எளிதாக பேருந்து நிலையத்தின் உள்ளே நுழையும் வகையிலும் சாலை வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளது! இன்னும் சாலைகளை விரிவு படுத்தும் வேலையும் நடந்து வருகிறது! கோயம்பேடு நெசப்பாக்கம் செல்லும் காளியம்மன் கோயில் தெரு என்னும் சாலை விரிவுபடுத்தப்பட்டு, நில எடுப்பு பனிகள் செய்யப்பட்டு வேலை துரிதமாக நடந்து வருகிறது!
மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் மெட்ரோ ரயில் ஓடும்வகையில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது!
இந்த பணிகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டுக்காகத்தான் துரிதமாக செய்யப்படுகிறது என்று மக்கள் மகிழ்ச்சியில் இருந்த வேளையில், ”உங்களுக்காகவா நாங்கள் அரசு பணத்தை பயன்படுத்தி, மத்திய அரசிடம் நிதி வாங்கி செய்கிறோம், அந்த அளவுக்கு கருனாநிதி வாரீசான நாங்கள் மடையர்களா?” என கேட்கும் குடும்பம் அனைத்தையும் உடைத்துத்தள்ளி, அந்த மைய இடத்தில் தங்களுக்கான சாப்பிங் காம்பிளக்ஸ்சை பங்களூரு இஸ்லாமிய பங்குதாரரோடு சேர்ந்து துவங்க இருக்கிறது என்பதுதான் இப்போதைய செய்தியாக உள்ளது!
சென்னை மாநகரில் வசிக்கும் மக்களில் 90 சதவிகித மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்!
பஸ் ஸ்டாண்ட் மாற்றம் என்பது அவசரம் அவசரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது,ஆனால்,ஒரு பஸ் நிலையத்துக்குரிய எவ்வித வசதியும் அந்த புதிய பஸ் நிலையத்தில் இல்லை! ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் அதிக செலவு ஆட்டோ டாக்சிக்கு ஆகிறது!
ஊரில் மிகப்பெரிய ஏமாற்று வேலைகளை செய்துவரும் ஒருவரை பார்த்து ஊர்மக்கள் சொல்வதுண்டு, “இவன் பெரிய பிராடா இருக்கிறானே! விட்டால் எல்.ஐ.சி யையே விற்றுவிடுவான் போல இருக்கிறதே” என்பர்! ( சென்னையில் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடத்தை குறிப்பிட்டு அப்படி சொல்வார்கள்)
அந்த வார்த்தையைத்தான் இன்று கருணாநிதி முடும்பத்தைப்பார்த்து தமிழக மக்கள் அனைவரும் சொல்லி வருகின்றனர்!
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த பித்தலாட்டங்களுக்கெல்லாம் கடுமையான கண்டணத்தை தெரிவித்துள்ளார்!
பாஜக மாநிலத்தலைவர் கண்டித்ததின் காரணமாக தீபாவளி இனிப்பில் கொள்ளையடிக்க திட்டமிட்டதை கைவிட்டதைப்போல,பொங்கல் இனாமில் கலப்பட பொருளை வழங்கிய ”அனிதா டெக்ஸ்” என்னும் நிறுவனத்தை டெண்டரில் சேர்க்கக்கூடாது என்னும் மக்கள் தலைவரின் எச்சரிக்கையை ஏற்றுக்கொண்டு அனிதா டெக்ஸ் பங்கேற்ற டெண்டரை திறந்து பார்க்காமலேயே பதுங்கியதைப்போல, கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயம் அழித்து நிறுவ இருந்த சிப்கார்ட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட்டதைப்போல, மயிலாடுதுறை தருமை ஆதீனத்தில் பல்லக்கு தூக்கக்கூடாது என்னும் உத்தரவை மக்கள்தலைவர் நானே தூக்குவேன் என்றதும் பின்வாங்கி ஓடியதைப்போல, மின் வாரியத்தில் சம்பாதிப்பதற்காக பி.என்.ஆர் எனர்ஜி என்னும் திமுகவின் பினாமியை தற்போதைக்கு தடை செய்திருப்பது போல, இந்த அரசு நிலத்தையும் அரசின் கட்டமைப்புகளையும் கபளீகரம் செய்யும் இந்த கிளாம்பாக்கம் கோயம்பேடு மோசடி திட்டத்தையும்கைவிட்டு,
– தென்மாநில பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயங்கிட வழிவகை செய்யவேண்டும் எனவும், கோயம்பேடு பஸ்ஸ்டாண்டையும் கோயம்பேடு மார்க்கெட்டையும் உடைத்து சாப்பிங் காம்ளக்ஸ் கட்டி சம்பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அரசை எச்சரிக்கிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.