பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு சில பகுதிகளில் இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கும்போது எந்தவித பிரச்னையும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தானில் மொபைல் போன்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான தனது எல்லைகளை மூடுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது முழு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான எல்லைக் கடப்பு சரக்கு வண்டிகள் ஏதும் வரமுடியாத வகையில் அனைத்தும் மூடப்படுவது தகவல் வந்துள்ளது.