பாரீஸ் ஒலிம்பிக் : பதக்கங்கள் அறிமுகம்!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் : பதக்கங்கள் அறிமுகம்!

Web Desk by Web Desk
Feb 9, 2024, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் பதக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வன இந்த ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கிலும், மீதமுள்ள பதக்கங்கள் பாரா ஒலிம்பிக்கிலும் வழங்கப்பட உள்ளன.

பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதென்ஸ் ஸ்டேடியத்தின் முன் நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் ஒலிம்பிக்கின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்சின் தனி அடையாளமான உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுர சின்னமும் ஒரு ஓரத்தில் இடம் பெற்றுள்ளது.

பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து அகற்றப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தன.

🧵 9/10: pic.twitter.com/E0DXa9WII3

— The Olympic Games (@Olympics) February 8, 2024

அவற்றை செதுக்கி, பாலிஸ் செய்து சிறிய துண்டுகளாக அறுங்கோண வடிவத்தில் பதக்கத்தின் பின்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும்.

பதக்கம் 85 மில்லிமீட்டர் சுற்றளவும், 9.2 மில்லிமீட்டர் அடர்த்தியும் கொண்டது. தங்கப்பதக்கம் 529 கிராம் எடை கொண்டது. இது முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டது அல்ல.

வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த பதக்கத்தில் 6 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். வெள்ளிப்பதக்கம் 525 கிராமும், வெண்கலம் 455 கிராமும் எடை கொண்டது. இந்த பதக்கங்களை பிரான்சின் பிரபல ஆபரண நிறுவனமான சாமெட் வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து பேசியப் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் டோனி எஸ்டான்கட் , ” 1889-ம் ஆண்டு உருவான ஈபிள் கோபுரத்தில் இருந்து ஒரு பகுதியை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Tags: olympicParis Olympics: Introduction of medals!
ShareTweetSendShare
Previous Post

டிசம்பருக்குள் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள்  நிறைவு! – நிதின் கட்கரி 

Next Post

உத்தரகாண்ட் வன்முறை : 144 தடையுத்தரவு !!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies