மெட்டா நிறுவனத்தின் தங்களின் கொள்கைகளை மீறியதாக கூறி ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கியுள்ளது.
ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால் இன்ஸ்டாகிராமில் இருந்து அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் செங்கடலில் கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரான பாலஸ்தீனிய பதிலடியை கமேனி பகிரங்கமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆதரித்து வந்தார்.
இதனால் இஸ்ரேல் ஆதரவாளர்களின் பல மாதங்களாக அவரின் இன்ஸ்டா கணக்கை நீக்க வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அலி கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நீக்கியது.
இதற்கு, “ஆபத்தான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கொள்கையை மீண்டும் மீண்டும் மீறியதற்காக இந்த கணக்குகளை நாங்கள் அகற்றியுள்ளோம்” என்று மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உலகை சீர்குலைக்கும் முயற்சியில், வன்முறைப் பணியை அறிவிக்கும் அல்லது வன்முறையில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் எங்கள் தளங்களில் இருப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மெட்டா தனது முடிவை அடிப்படையாகக் கொண்ட கொள்கை கூறுகிறது.
கமேனி பாரசீக மொழியின் 5.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட இன்ஸ்ட்ராகிராம் கணக்கை வைத்திருந்தார். அதே சமயம் அவரது ஆங்கில மொழி கணக்கில் 204,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.