நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராக இருக்கும் எதிஹாட் எர்வேஸ் நிறுவனத்தின் பெயர் போட்ட சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 16 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தாண்டு போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சென்னை அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.
இதனை அறிவிக்கும் விதமான நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள், சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். அதில், தோனியின் ஜெர்சி நம்பர் 7 கொண்ட சிஎஸ்கே ஜெர்சி வெளியிடப்பட்டது.
அதில், ஜெர்சியின் பின்பக்கத்தில் எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே வீரர்கள் இது போன்ற ஜெர்சி அணிந்து தான் விளையாடுவார்கள்.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் இருக்கிறார்.