பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
Sep 8, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!

Web Desk by Web Desk
Feb 9, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது என இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்க திகழ்ந்தவர் தான் முகமது ஷமி.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்களை வீழ்த்தினார். இருப்பினும் ஷமி போன்ற இந்திய பவுலர்களுக்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஸ்பெஷல் பந்தை கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஜா கடுமையாக விமர்சித்தார்.

அதனாலேயே இந்திய பவுலர்கள் அதிக ஸ்விங்கை பெற்று நிறைய விக்கெட்டுகளை எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் விக்கெட் எடுத்த பின் மைதானத்தில் மண்டியிட்டு ஷமி தொழுகை செய்ய முயற்சித்தபோது மற்ற இந்திய வீரர்கள் விடவில்லை என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக முகமது ஷமி சமீபத்திய கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுப்பது என்னுடைய ரத்தத்தில் கலந்துள்ளது. அவர்கள் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கியுள்ளார்கள். ஏனெனில் நாம் மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில்லை.

பாராட்டும்போது மகிழ்ச்சியடையும் நீங்கள் தோற்கும்போது மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதாக கருதுகிறீர்கள். இந்திய அணியின் வெற்றி புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பாருங்கள். அங்கே பாகிஸ்தானால் நெருங்க கூட முடியாது.

உங்களிடம் இவ்வளவு பொறாமை இருந்தால் கண்டிப்பாக வெற்றி முடிவுகள் கிடைக்காது. என்னுடைய பந்துவீச்சை பாராட்டாத சிலர் குறை சொல்லி களத்தில் நான் தொழுகை செய்ய முயற்சித்தபோது யாரும் அனுமதிக்கவில்லை என்று விமர்சித்தனர்.

ஆனால் அப்போட்டியில் என்னுடைய சக்தியை தாண்டி தொடர்ந்து 5 ஓவர்கள் வீசினேன். அதன் பயனாக கடைசியில் ஐந்தாவது விக்கெட் கிடைத்தபோது மகிழ்ச்சியில் மண்டியிட்டேன். அப்போது பின்னே இருந்து ஒருவர் தள்ளியதால் நான் முன்னோக்கி சென்றேன்.

அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து நான் தொழுகை செய்ய முயற்சித்தும் இந்திய அணியினர் விடவில்லை என்று சிலர் விமர்சித்தனர். தயவு செய்து இதை நிறுத்துங்கள். ஏற்கனவே சொன்னதுபோல் நான் முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

அதே சமயம் நான் இந்தியன். இங்கே நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன். எனவே சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று கூறினார்.

Tags: indian cricket playerMohammed Shami responded to the Pakistanis!pakistan team
ShareTweetSendShare
Previous Post

பாதுகாவலரை அடிக்கப் பாய்ந்த தி.மு.க அமைச்சர்! – அதிர்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள்!

Next Post

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது! – மோடிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies