தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 322 இடங்களில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியதாவது, நாடு முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 925 இடங்களில், இயற்கை வேளாண்மைப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 66,806.70 ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 64,04,113.43 ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 16.19 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். எட்டு மாநிலங்கள் தங்களது சொந்த வணிக முத்திரை கொண்ட இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களை மேம்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தெரிவித்தார்.