இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
காசா மீது போர் நடத்தியதற்காக இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தனது இணையதள பக்கத்தில் தங்களின் கோரிக்கையை தெரிவித்துள்ளது. அதில், கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை முற்றிலும் இடைநீக்கம் செய்யவேண்டும்.
இந்த நடவடிக்கை இஸ்ரேல் செய்யும் தீவிரவாத குற்றங்களை தடுக்கவும், அப்பாவி மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கவும் உதவியாக இருக்கும் ” என கோரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இந்த போரில் குறைந்தது 27,947 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதற்காக தற்போது ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு இத்தகையக் கோரிக்கையை வைத்துள்ளது.