அறிவியல் தொடர்பான கூட்டம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!
Oct 6, 2025, 10:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவியல் தொடர்பான கூட்டம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Feb 11, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் மத்திய அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.

டெல்லியில் அறிவியல் தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். மாணவர்களின் விண்வெளித் திறன்களை மேம்படுத்த கடந்த மாதம் நடத்தப்பட்ட விண்வெளி ஹேக்கத்தான் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

கடந்த  ஜனவரி மாதம் 17 முதல் 20 வரை  ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இந்திய சர்வதேச அறிவியல் விழா – 2023  நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி தொடர்பாக 30 மணி நேர ஹேக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஹேக்கத்தான் திட்டத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், ஒரு மாத காலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். ஃபரிதாபாத்தில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 57 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்ட கூட்டுக் கூட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரி  தொழில்நுட்பம், இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில், புவி அறிவியல், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் பணி இடங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு அறிவியல் பிரிவுகளிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையை  உருவாக்க ஜிதேந்திர சிங் தொடங்கிய அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர ஆய்வுக்  கூட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைய கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை, அணுசக்தித் துறை, இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Tags: jitendra singhMinister for Science & Technologymonthly joint meetingScience Ministries and Departments
ShareTweetSendShare
Previous Post

‘SWATI’ தளம் தொடக்கம்!

Next Post

கோவை கார் குண்டுவெடிப்பு! – 21 இடங்களில் சோதனை; 4 பேர் கைது!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies