கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை 21 இடங்களில் சோதனை செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலையில் கார் வெடித்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் இறந்தார். அவரிடம் 2019ல் தேசிய புலனாய்வு முகமை (NIA -National Investigation Agency Government of India) விசாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி, சதிச்செயல்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர். ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பிறகு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 21 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் அரபி மொழி கற்று கொடுப்ப போல் மூளைச்சலவை செய்து இளைஞர்களை தவறாக வழிநடத்தியது தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறபப்டுகிறது.
கைதான 4 பேரிடம் இருந்து 6 லேப்டாப், 25 செல்போன்கள், 36 சிம்கார்டுகள், ஹார்ட்டிஸ்க் உள்பட பிற மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.