தமிழக சட்டமன்ற தேர்தல் - தவெக அதிக இடங்களில் முன்னிலை!
Jun 21, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2026, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரைவிட 20 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றார்.

கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளரான வி.எஸ்.பாபு, திமுக தலைவர் ஸ்டாலினை ஏழாயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தவெக வேட்பாளரான செல்வம், திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆனந்த், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை தோற்கடித்தார்.

வில்லிவாக்கம் தொகுதி தவெக நட்சத்திர வேட்பாளரான ஆதவ் அர்ஜூனா, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனைவிட 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எழும்பூர் தனி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன், திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னாவை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி தவெக வேட்பாளரான ஜேசிடி பிரபாகர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதனை தோற்கடித்தார்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்ட செங்கோட்டையன், திமுக வேட்பாளர் நல்லசிவத்தைவிட 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அருண்ராஜ், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரைவிட நான்காயிரத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தவெக வேட்பாளர் நிர்மல் குமார், திமுக வேட்பாளர் கிருத்திய தங்கபாண்டியைவிட 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், திமுகவின் கீதா ஜீவனைவிட 24 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூர் வடக்கு தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா, அதிமுக வேட்பாளர் ஆனந்தனைவிட 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Tags: 2026 tamil nadu assembly electionstamil nadu assembly elections newstvk wonTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Next Post

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies