கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல, வழக்கமாக இயக்கப்படும் 18 ரயில்களுடன் சேர்த்து கூடுதலாக 32 சிறப்பு இரயில்கள் என மொத்தம் 50 இரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், 155 பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அரிசி, பருப்பு, காய்கறி வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அன்னதானம் சமைக்க தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
தீபத் திருவிழாவையொட்டி காஞ்சிபுரத்திலிருந்து 150வது ஆண்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 500 கிலோ மலர் மாலைகள் அனுப்பப்பட்டன. 60-க்கும் மேற்பட்டோர் இணைந்து 500 கிலோ மலர்களால் பிரம்மாண்ட மாலைகளைத் தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த மலர் மாலைக்கு சிறப்பு பூஜை செய்து, பின்னர் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தனர்.
















