உச்சநீதிமன்றத்தின் இடைக்காலை உத்தரவின்படி திருப்பரங்குன்ற தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தற்போது வரை பட்டியலிடப்படவில்லை என்றும், திருமாவளவன் நவாஸ்கனி போன்றவர்களிடம் இருந்து தவெக விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















