திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக பாதையில் தவெக அரசும் சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க சென்ற போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற இந்துக்கள் இவ்வளவு போராட வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் ஆகிய இரு தரப்பையும் தவெக அரசு ஏமாற்றுவதாக தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்வதன் மூலம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்கிற மனநிலையை இந்துக்களுக்கு தெரியப்படுத்தி விட்டார்கள். மேலும் இதே மேல்முறையீட்டின் மூலம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்கிற பொய்யான மனப்பான்மையை சிறுபான்மையினருக்கு தெரிவிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















