திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என,
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், அதனைச் செயல்படுத்த வேண்டிய அறநிலையத்துறை ஆணையரே மறுஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார்,
தவெக அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது அல்ல என்றும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















