திருப்பரங்குன்றம் வழக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சீராய்வு மனு தாக்கல் செய்வது, அவரது தீய எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உடனே செயல்பட்டு தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்துக்களின் உரிமையை தடுக்க மட்டும் துடிக்கிறார் என்றால் அவருக்கு உள்ளே ஊறியிருக்கும் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ததன் மூலம் அப்பட்டமான இந்து விரோத எண்ணம் வெளிப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முருகனின் அருளால் இந்த தீய எண்ணம் கொண்ட தவெகவின் எண்ணம் பலிக்காது என்றும்,
இந்து முன்னணி இந்த நயவஞ்சகக் கூட்டத்தை எதிர்த்து சட்டம் மற்றும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை துணிந்து நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆர்த்தெழுந்து போராட வருமாறு இந்து முன்னணி சார்பில் அறைகூவல் விடுப்பதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
















