பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தபோது துண்டை சுழற்றிய நிகழ்வு பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலியில், கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பீகார் ஆளுநர், முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலம் திறப்பு நிகழ்வின்போது பிரதமர் மோடி தனது கழுத்திலிருந்த துண்டை கழற்றி, காற்றில் சுழற்றி மக்களை உற்சாகப்படுத்தினார். கடந்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது, பிரதமர் மோடி தனது துண்டை சுழற்றிய நிலையில், அதேபோன்ற செயலை நிகழ்த்திக் காட்டியது
அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
















